சென்னை: உலகம் முழுவதும் 2019ஆம் ஆண்டு தொடங்கிய கரோனா நோய்த்தொற்று பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியுள்ளது.
மேலும் உலகம் முழுவதும் பொருளாதாரத்தை முடக்கியது. இதனால், ஏராளமான தொழில்கள் பாதிக்கப்பட்டன. பொருளாதாரமும் சரிந்தது.

தற்போது மெல்ல மெல்ல சகஜ நிலை திரும்பிவந்தாலும் கரோனாவின் பாதிப்பு மட்டும் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இதற்கு கவிஞர் வைரமுத்து தனக்கு தோன்றிய ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்துப் பெருங்கடல் நாடுகளை ஒரே ஒன்றியமாய் ஒன்றிணைத்து பொது வணிகக் கொள்கை வகுத்து 'ஏசியன் டாலர்' என்ற நாணயம் உண்டாக்கி, நடைமுறை செய்தால் கரோனாவில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் எழுச்சிபெறக்கூடும் என்பது என் தாழ்மையான எண்ணம் சிந்திப்பார்களா... அந்தந்த நாடுகளின் ஆட்சியாளர்கள்?" என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'பாரதி மொழியில் பலே பாண்டியா' - முதலமைச்சரைப் பாராட்டிய வைரமுத்து