இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் ‘டாணா’. இதில் பாண்டியராஜன், யோகி பாபு, நந்திதா, ஹரிஷ் பெரேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘டாணா’ என்பதற்கு போலீஸ் என்று பொருள்.
குரல் பிரச்சனையால் போலீஸ் ஆவதற்கு சிரமப்படும் 'டாணா' வைபவ் - டாணா வெளியாகும் தேதி
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாணா' படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
போலீஸ்காரர்களை டாணாக்காரார்கள் என அழைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் சில பகுதிகளில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பாரம்பரிய போலீஸ் குடும்பத்தில் பிறந்த வைபவை போலீசாக்க அவர் தந்தை முயற்சி செய்கிறார். ஆனால் வைபவ்விற்கு சந்தோஷத்திலும் தூக்கத்திலும் குரல் பெண்குரலாக மாறும் பிரச்னையை சந்திக்கிறார்.
அதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள், கலாட்டாக்களை நகைச்சுவையாகவும் திகலாவும் காட்சிகள் அமைந்துள்ளது. இப்படம் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ படத்துக்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட பெயர் ‘டாணா’ என்பது குறிப்பிடத்தக்கது.