கன்னட திரையுலகில் டிசம்பர் 2018 ஆம் ஆண்டு வெளியானது கே.ஜி.எஃப் திரைப்படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னட சினிமாவில் அதிக பெருட்செலவில் தயாரித்த முதல் படம் இதுவாகும்.
நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதன் வசூல் சாதனையால் இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.
இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கேஜிஎஃப்- 2 என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் அதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் வடசென்னை படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரனாக நடித்த சரண் சக்தி, கேஜிஎஃப்-2 படத்தில் இளம் யஷ்யாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் 2020ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.