ஆதிக்க சமுதாயத்தினருக்கு சார்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் என விமர்சிக்கப்பட்ட "திரௌபதி" மூலம் பலரது கவனத்தையும் பெற்றவர், இயக்குநர் மோகன் ஜி.
வாலை சுருட்டு... இன்று மாலை ருத்ர தாண்டவம் லிரிக் வீடியோ - மோகன் ஜி
சென்னை: மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் வாலை சுருட்டு பாடல் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகிறது.
மோகன் ஜி
இவர் தற்போது ருத்ர தாண்டவம் எனும் படத்தை இயக்கியுள்ளார். ரிச்சர்ட் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியானது. அக்டோபர் 1ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், ருத்ர தாண்டவம் படத்தின் “வாலை சுருட்டு” என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகுமென அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.