நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதையடுத்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்தி பரவிவந்தது. மேலும் அப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
இதை வெற்றிமாறன் சமீபத்தில் பேட்டியில் உறுதிசெய்தார். மேலும் படத்திற்கு 'வாடிவாசல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். 1959ஆம் ஆண்டு சி.சு. செல்லப்பா எழுதி வெளியிட்ட ‘வாடிவாசல்’ நாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை தனது அப்பாவை குத்திக் கொலைசெய்கிறது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சூர்யா காளையை ஜல்லிக்கட்டில் வென்று பழி வாங்குகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜமீன்தார் தன் காளை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார்.
சூர்யா எப்படி காளையை அடக்குகிறார், அதற்காக எப்படி பயற்சி எடுக்கிறார் என்பதே படத்தின் கதையாகும். முதல் முறையாக இப்படம் மூலம் சூர்யா-வெற்றிமாறன் கூட்டணி அமைந்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான 'அசுரன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் அச்சம் தேவையில்லை' - நடிகர் விவேக்