நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான இன்று (நவ.07), யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது.
இந்த அறிவிப்பை அந்நிறுவனம் காணொலி வாயிலாக அறிவித்தது. அதில், ”2013ஆம் ஆண்டு மிர்ச்சி திரைப்படத்தில் “அழகு ராணி”-யாக நமது உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் அனுஷ்கா. 2018-ல் பாகமதியில் “அச்சமில்லா அரசி”-யாக நம்மை ஆட்கொண்டார்.
தற்போது, “அரசி” அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். அனுஷ்காவின் 48ஆவது படமான இந்த நவீனக் கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்வீட்டி ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.