சென்னை: கார்த்திக் கண்ணன் இயக்கத்தில் 'ஊர்வசி' இணையத்தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். விழாவில் பேசிய பேரரசு கூறுகையில், 'பெண்கள் பெயரிலேயே எனக்குப் பிடித்த பெயர் ஊர்வசி. ஏனென்றால், பெயரிலேயே ஊர் உள்ளது. 'ஊர்வசி' என்றாலே வெற்றிதான். இப்படம் வெற்றி அடையும்.
இளைஞர்களைக் கவரும் வகையில் இப்படத்தை எடுத்துள்ளார், இயக்குநர். நல்ல விஷயம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஆரம்பத்தில் திகில் மற்றும் செக்ஸ் கலந்து எடுக்கப்பட்டு படங்கள் வந்தன. தற்போது இந்த நிலை மாறிவிட்டது. வெற்றிக்கு பிரமாண்டம் மற்றும் கோடி கோடியாய் பட்ஜெட் தேவையில்லை.