மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள், டீசர்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது.
'கர்ணன்' திரைப்படம் - உதயநிதி ஸ்டாலின் பாராட்டு - கர்ணன் திரைப்படம்
ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும். மறுக்கப்பட்ட உரிமைகளையும் மிகைப்படுத்தாமல் எடுக்கப்பட்ட படம் 'கர்ணன்' என உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கர்ணன் படத்தை பார்த்த நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார். அதில், " 'கர்ணன்' பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்தாமல் எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், கலைப்புலி தாணு, இயக்குநர் மாரிசெல்வராஜ் மூவரிடமும் பேசி எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடியங்குளம் கலவரம், 1997 திமுக ஆட்சியில் நடந்ததாக படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக தயாரிப்பாளர், இயக்குனரிடம் சுட்டிக்காட்டியதாகவும், இரு தினங்களில் சரி செய்து விடுவதாக அவர்கள் கூறியதாகவும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.