மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதிராவ், இயக்குநர் ராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘சைக்கோ’. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மிஸ்கினின் 'சைக்கோ' வெளியாகும் தேதி அறிவிப்பு! - உதயநிதி ஸ்டாலின் சைக்கோ
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'சைக்கோ' படம் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
![மிஸ்கினின் 'சைக்கோ' வெளியாகும் தேதி அறிவிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5030193-530-5030193-1573480769403.jpg)
psycho
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் வெளிவரும் இப்படம் த்ரில்லர் கதைகள் பிடிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இப்படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.