தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் புதியப்படம்

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Uday nidhi
Uday nidhi

By

Published : Nov 6, 2020, 1:12 PM IST

'தடம்' படத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர் பலர் விருப்பம் தெரிவித்து வந்தனர். தற்போது மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்க உள்ளார்.

கரோனா அச்சுறத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (நவம்பர் 6) சென்னையில் படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டுளன. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நிதி அகர்வால் நயாகியாக நடிக்கவுள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது.

இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கிறது ஒளிப்பதிவாளராக தில்ராஜ், இசையமைப்பாளராக அரோல் கொரோலி, படத்தொகுப்பாளராக ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர். நவம்பர் 9ஆம் தேதி தொடங்கும் இப்படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் - நிதி அகர்வால் சம்பந்தபட்ட காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details