தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'உடன்பிறப்பே' - அமேசான் பிரைமில் வெளியீடு!

சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த உடன்பிறப்பே திரைப்படம், அமேசான் பிரைமில் இன்று வெளியானது.

'உடன்பிறப்பே' - அமேசான் பிரைமில் வெளியீடு!
'உடன்பிறப்பே' - அமேசான் பிரைமில் வெளியீடு!

By

Published : Oct 14, 2021, 8:15 PM IST

சென்னை: 'கத்துக்குட்டி' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில், 'உடன்பிறப்பே' திரைப்படம் உருவாகியுள்ளது. சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ள இந்த படம், உறவுகளை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. அண்ணனாக சசிகுமாரும், தங்கை கதாபாத்திரத்தில் ஜோதிகாவும் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளையும், விவசாயத்தையும் தழுவியே படம் முழுக்க எடுக்கப்பட்டிருப்பதால், படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும். ஜோதிகாவின் 50ஆவது படமான 'உடன்பிறப்பே', இன்று (அக்.14) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:கோபப்பட்டா கட்டாறு, கரையும் இல்ல, தடையும் இல்ல - மாஸாக வெளியான அண்ணாத்த டீசர்

ABOUT THE AUTHOR

...view details