பாலிவுட் சினிமாவின் 60களின் இறுதியிலும், 70களின் தொடக்கத்திலும் கோலோச்சிப் பறந்த நடிகர் ராஜேஷ் கண்ணா. சினிமாவில் அறிமுகமாக காலக்கட்டத்தில் பல காதல் படங்களில் நடித்து அன்றைய ரசிகைகளின் மனதைக் கவர்ந்த ராஜேஷ் கண்ணாவை இந்தியாவின் முதல் ட்ரீம் பாயாக இன்றளவும் திரை உலகம் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜூலை.18) தனது தந்தை ராஜேஷ் கண்ணாவின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது மகளும், நடிகையுமான ட்விங்கிள் கண்ணா அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
தனது பதிவில் 1974ஆம் ஆண்டு ராஜேஷ் கண்ணா, மும்தாஜ், சஞ்சீவ் குமார் நடிப்பில் வெளியான ஆப் கி கசம் படம் குறித்து நினைவுகூர்ந்துள்ள ட்விங்கிள், ”நான் என் அப்பாவின் கண்களைக் கொண்டுள்ளேன். என் மகன் என் அப்பாவின் சிரிப்பைக் கொண்டுள்ளான். மக்கள் அவரது பாகங்களை தங்கள் மனதில் கொண்டுள்ளனர். அவர் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.