அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கிவரும் திரைப்படம், ‘துக்ளக் தர்பார்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அதிதி ராவ், பார்த்திபன், கருணாகரன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
துக்ளக் தர்பார் பட அப்டேட்டை வெளியிட்ட படக்குழு - latest kollywood news
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
துக்ளக் தர்பார்
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் நாளை காலை 12.30 மணிக்கு, சன் டிவியின் யூ-டியூப் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வரும் இப்படத்தில், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியாற்றி வருகிறார். முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விஜய் சேதுபதி ரசிகர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விஜய்யா...வைரஸா.. - காற்றில் பறந்த கரோனா விதி!