தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 'காலா' டொவினோ!

டொவினோ தாமஸ் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டொவினோ தாமஸ்
டொவினோ தாமஸ்

By

Published : Oct 7, 2020, 5:33 PM IST

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், தற்போது வி.எஸ். ரோகித் இயக்கத்தில் 'காலா' என்கிற படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது. நேற்று (அக்டோபர் 6) நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பில் டொவினோவின் வயிற்றுப்பகுதியில் அடிபட்டது. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் டொவினோ தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இன்று (அக்டோபர் 7) டொவினோவிற்கு வயிற்றுவலி அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details