தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் மருத்துவமனையில் அனுமதி - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

ஹைதராபாத்: அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்று சாலை விபத்தில் சிக்கிய நடிகர் சாய் தரம் தேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

சாய் தரம் தேஜ்
சாய் தரம் தேஜ்

By

Published : Sep 11, 2021, 6:58 AM IST

Updated : Sep 11, 2021, 7:51 AM IST

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனும், நடிகருமானவர் சாய் தரம் தேஜ். இவர் தெலுங்கில் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் நேற்று (செப். 10) ஹைதராபாத்தில் உள்ள மாதப்பூரில் தனது ஸ்போர்ட் பைக்கில் அதிவேகமாகச் சென்றார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, சுயநினைவை இழந்தார்.

சாய் தரம் தேஜ்

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனே மீட்டு ஹைரெக் சிட்டியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சாய் தரம் தேஜ் பைக்

இவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாய் தரம் தேஜ் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.

சிசிடிவி காட்சி

அவரது தலை, கை என சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவரது உடல்நிலை குறித்த அடுத்த அறிவிப்பு இன்று (செப். 11) காலை வெளியிடப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஹைதராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Last Updated : Sep 11, 2021, 7:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details