’குத் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஷ்வின். அதிலும் குறிப்பாக ஷிவாங்கி-அஷ்வின் காம்போ பலரின் மனதிற்கு மிக நெருக்கமானதாக அமைந்துள்ளது. இதற்கிடையில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து, ஹரிஹரன் இயக்கும் படத்தில் அஷ்வின் கதாநாயகனான நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ் நகைச்சுவை நடிகராக நடிக்க, முழுக்க முழுக்க ரொமான்டிக், நகைச்சுவை படமாக இத்திரைப்படம் உருவாகிறது. வரும் மே மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சென்னையில் படமாக்கப்படவுள்ளது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் கூறுகையில், “டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் எப்போதும் புது விதமான கதைகளை படமாக்க ஆவலாக உள்ளோம். இயக்குநர் ஹரிஹரன் இந்தக் கதையை விவரிக்கும்போது காதல், பொழுதுபோக்கு, வேடிக்கை அம்சங்கள் நிறைந்த ஒன்றாக இப்படம் இருப்பதை உணர முடிந்தது. இப்போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலுள்ளோருக்கும் மிகப் பிடித்தவர்களாக மாறியுள்ள அஷ்வின், புகழ் போன்ற சிறந்த கலைஞர்களை இந்தப் படத்தில் ஒன்றாகக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.