டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, ’ஜாம்பி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் டிக்டாக்கில் மிகவும் கவர்சியாக நடனமாடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிக்டாக் செயலியில் இலக்கியா பெயரில் புதிதாக போலி கணக்கு உருவாக்கப்பட்டு, பலரிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த இலக்கியா இவ்விகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த நடிகை! இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து இலக்கியா பேசியதாவது, ”என் பெயரில் யாரோ போலி கணக்கு தொடங்கி 5,000 ரூபாய் வரை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளனர். நான் அது போன்று பணம் பறிக்கவில்லை. அதனால் என் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னால் வெளியே எங்கேயும் செல்ல முடியாததால், போலி கணக்கு வைத்து மோசடி செய்யும் நபர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்’’ என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க:'மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாதீர்கள்' - கொரோனா குறித்து கரீனா கபூர் ட்வீட்