தமிழ்நாட்டில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. டிக் டாக் செயலியை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவித்தது. சும்மாவே ஆடும் நமது இளம் தலைமுறையினர், தடை நீங்கிய பிறகு தான் பேசுவதை எல்லாம் வீடியோவாக எடுத்து டிக் டாக்கில் வெளியிடுகின்றனர். ஒரு சிலர் டிக் டாக் வீடியோவில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். தற்போது டிக் டாக் வீடியோ இளம் தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறிவிட்டது.
அட பாவிங்களா..! - நடிகர் விவேக்கை கலங்கடித்த டிக் டாக் வீடியோ!
நடிகர் விவேக்கை அதிர வைத்த டிக் டாக் வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விவேக்
இந்நிலையில், சாமி படத்தில் விவேக் நடித்திருந்த 'லா ஷகீலா' என்ற காமெடி காட்சியை, ஒருவர் நாயுடன் நடித்து டிக் டாக் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நடிகர் விவேக், அட பாவிங்களா! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா?!?! 😂' என்று கூறி அந்த டிக் டாக் வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த டிக் டாக் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.