இந்தியில் 'ஹீரோபன்டி' திரைப்படத்தில் அறிமுகமாகி நடிப்பில் பெயரெடுத்து, 'பாகி', 'பாகி-2', 'வார்' என அடுதடுத்து சண்டை திரைப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகர்கள் பெயர் பட்டிலில் இடம் பிடித்தவர் நடிகர் டைகர் ஷெராஃப். இவர் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃபின் மகனாவார்.
தற்போது இவர் 'பாகி' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் புதிய யுக்தியை கையாளப்போகிறாராம் டைகர். ஆதாகப்பட்டது ஹாலிவுட்டில் மாஸ் காட்டிய கல்ட் திரைப்படமான 'த மேட்ரிக்ஸ்' படத்தில் நடிகர் கீனு ரீவ்ஸின் ஹிட்டான சண்டைக் காட்சியை 'பாகி- 3' இல் மீண்டும் உருவாக்கப்போகிறாராம்.