தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தோழர் வெங்கடேசன்' படம் தேசிய விருது வெல்லும் - சுசீந்திரன் நம்பிக்கை - சுசீந்திரன்

'தோழர் வெங்கடேசன்' திரைப்படம் நிச்சயமாக மக்கள் மனதைக் கவர்ந்து தேசிய விருதை வெல்லும் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

தோழர் வெங்கடேசன்

By

Published : Jun 30, 2019, 12:06 PM IST

காலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கியுள்ள திரைப்படம் 'தோழர் வெங்கடேசன்'. இப்படத்தில் அரிசங்கர், மோனிகா சின்னகொட்லா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தை வெளியிடுகிறார். சகிஷ்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கும் இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

‘தோழர் வெங்கடேசன்’ பட போஸ்டர்

இந்த விழாவில் படக்குழுவினருடன் பலரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, 'தோழர் வெங்கடேசன்' நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரின் வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் என எந்த விதமான தாக்கங்களையும், வேதனைகளையும், அழகாக காட்சிப்படுத்துகிறது. இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டிக்காட்டி அதிர்வை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

தோழர் வெங்கடேசன்

மேலும், இப்படத்தின் பல காட்சிகளை பல்வேறு கோணங்களில் ட்ரான் தொழிட்நுட்பத்துடன் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தப் படம் நிச்சயமாக தேசிய விருது பெறும் படமாக அமையும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details