தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஜினி, கமல், விக்ரம் வரிசையில் 'தலைவி' கங்கனா! - அமெரிக்கா

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் கங்கனா ரணாவத், நான்கு தோற்றங்களுக்காக புரோஸ்தெடிக் மேக்கப் செய்துகொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

kangana ranaut

By

Published : Sep 21, 2019, 7:38 AM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் ஆளும் அதிமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் இயக்குநர் விஜய் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு தோற்றங்களில் நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகருக்கு இணையாக கங்கனா ரணாவத் நடிப்பது இதுவே முதல்முறை.

படக்குழுவினருடன் கங்கனா

மேலும், நான்கு தோற்றங்களில் நடிப்பதால் ஜெயலலிதாவின் சிறுவயது புகைப்படம், உடல் மொழி மற்றும் பரதநாட்டியம் என அனைத்தையும் தெளிவாக கற்றுவருகிறார். ஜெயலலிதா நடித்த படங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறாராம். இந்நிலையில், 'தலைவி' படத்திற்காக புரோஸ்தெடிக் (முகவார்ப்பு) மேக்கப் டெஸ்டிற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். கங்கனா ரணாவத் தனது உடலமைப்பை புரோஸ்தெடிக் மேக்கப் செய்யும் புகைப்படத்தை அவரது சகோதரி ரங்கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'ஒரு நடிகையாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. புரோஸ்தெடிக் மேக்கப்பிற்காக கங்கனா எடுத்த மெடுக்கெடு எங்களை விம்மவைத்தது' என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் புரோஸ்தெடிக் மேக்கப் என்பது புதிதல்ல; முன்னதாக அவ்வை சண்முகி படத்திற்காக கமல்ஹாசனும் எந்திரன் படத்திற்காக ரஜினிகாந்தும் ஐ படத்திற்காக விக்ரமும் புரோஸ்தெடிக் மேக்கப் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details