அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் விஜய் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் தளபதி 64 பற்றி அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. தற்போது விஜய் தேவரகொண்டாவின் 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்த ரஷ்மிகா மந்தானா இதில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி 64 படத்தின் கதாநாயகி இவர்தான்? - விஜய்
தளபதி 64 படத்தில் ரஷ்மிகா மந்தானா கதாநாயகியாய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
vijay 64
ரஷ்மிகா மந்தானா கன்னட நடிகை. தெலுங்கு, கன்னடம் என இரு மொழி படங்களிலும் நடித்துவந்தார். ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன், கார்த்தியை வைத்து இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். பேட்டி ஒன்றில், தனக்கு மிகவும் பிடித்த தமிழ் சினிமா நடிகர் விஜய் என அவர் கூறியிருந்து குறிப்பிடத்தக்கது. தளபதி 64 படத்தில் அவர் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.