'ரெமோ' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள படம் 'சுல்தான்'. இப்படத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நெப்போலியன், கே.ஜி.எஃப். வில்லன் ராமச்சந்திர ராஜூ, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏப்ரல் இரண்டாம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
சுல்தான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது! - சுல்தான் வெளியாகும் தேதி
சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்' படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
Sulthan
விவேக் மெர்வின் இசையில் வெளியான 'ஜெய் சுல்தான்', சிம்பு பாடிய 'யாரும் இவ்ளோ அழகா பாக்கல' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அந்தோணி தாசன் பாடிய 'எப்படி இருந்த நாங்கள்' என்ற பாடலை கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளனர்.