லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான திரைப்படம் 'தி வாரியர்'. இரு மொழிகளில் உருவாகிவரும் இத்திரைப்படம், கோலிவுட்டில் ராம் பொத்தினேனிக்கு சிறப்பான அறிமுகத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. போஸ்டரில் ராம் பொத்தினேனி காவல்துறை அலுவலராக தோற்றமளிக்கிறார். 'தி வாரியர்' திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ’தி வாரியர்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க:தனுஷின் 'பொல்லாத உலகம்' பாடல் யூ டியூபில் சாதனை!