'பேய்' வேடத்தில் மீரா மிதுன் நடிக்கும் "பேய காணோம்" படத்தை செல்வ அன்பரசன் இயக்குகிறார். குளோபல் எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிக்கும் இப்படத்தில் இயக்குநர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இசையமைப்பாளராக மிஸ்டர் கோளாறு, ஒளிப்பதிவாளராக ராஜ் ஓ.எஸ், கௌபாஸு, பிரகாஷ், ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது.