தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கேங் லீடர்' நானி அடுத்த மாதம் விடுதலை! - சாஹோ

நடிகர் நானி நடிப்பில் உருவாகி உள்ள 'கேங் லீடர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

nanni

By

Published : Aug 11, 2019, 12:54 AM IST

தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான '24' படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் தெலுங்கில் நடிகர் நானியை வைத்து 'கேங் லீடர்' படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை ஆகஸ்ட் இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சாஹோ' படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகிறது. இதனால் நானியின் கேங் லீடர் வெளியிட்டு தேதியை படக்குழு மாற்றியுள்ளது. 'கேங் லீடர்' செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது.

நானி ட்வீட்

வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனாலும் நானி அதைப் பற்றிக் கவலைப்படாமல் 'சாஹோ' படத்துக்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'சாஹோ' நமது படம் என்றும், அது வெற்றிபெற்றால் அது நமது கொண்டாட்டம் என்றும் நானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 'சாஹோ' வெளியீட்டுக்காக தங்கள் படங்களின் வெளியீட்டுத் தேதிகளை மாற்றிக்கொண்ட படங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் பிரபாஸ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் "ஆகஸ்ட் 30 அன்று 'சாஹோ' வெளியீட்டுக்காக தங்கள் படங்களின் வெளியீட்டுத் தேதிகளை மாற்றியிருக்கும் அனைத்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு மிகப்பெரிய நன்றி. உங்கள் அனைவருக்கும் 'சாஹோ' படக்குழு கடன் பட்டுள்ளது. உங்கள் படங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு என் அன்பும், வணக்கங்களும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details