தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இமயங்களுடன் மோதும் கொசு! - 'தி மஸ்கிட்டோ பிலாசபி'!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ’The Mosquito Philosophy’ என்ற திரைப்படம் போட்டி போட களமிறங்கியுள்ளது.

iffc
iffc

By

Published : Feb 19, 2021, 10:05 PM IST

வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் 'The Mosquito Philosophy'. தற்போது 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நடிகர் சூரியாவின் 'சூரரைப் போற்று', நடிகர் விஜய் சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' ஆகிய படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது.

படத்தின் ஒரு காட்சி

அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய 'The Mosquito Philosophy' காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சுயாதீன விழாவில் (IFFC) இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறியிருந்தார்.

எழுதப்பட்ட திரைக்கதை வசனம் எதுவுமின்றி வெறும் 6 மணி நேரத்தில் 'The Mosquito Philosophy' படமாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரீ-டேக் என்ற ஒரு விஷயமே இல்லை. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இணை தயாரிப்பாளருமான ஜதின் ஷங்கர் ராஜ், முன்னேற்பாடுகள் எதுவுமின்றி இருக்கும் சூழலையும் சுற்றுப்புற வெளிச்சங்களையும் மட்டுமே வைத்து இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார்.

படத்தின் ஒரு காட்சி

மேலும் படத்தின் முதன்மை நடிகர் சுரேஷ், இயக்குநர் ஆகிய இருவரைத் தவிர மற்ற எந்த நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் இப்படத்தின் கதை தெரியாது. இவ்வாறு பல்வேறு சுவாரசியமான விஷயங்களை இப்படம் உள்ளடக்கியுள்ளது. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற "லென்ஸ்" திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் இரண்டாவது படம்தான் "The Mosquito Philosophy". இவர் தனது முதல் படத்திற்கு "சிறந்த அறிமுக இயக்குநர்" என பல விருதுகளை வாங்கி குவித்தார்.

இந்த படத்திற்கு ஜெதின் ஷங்கர் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, கன்னட திரையுலகை சேர்ந்த ஐயோ ராமா பின்னணி இசை அமைத்துள்ளார். இது பிப்ரவரி 23ஆம் தேதி மதியம் 3 மணிக்கு சத்யம் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

இதையும் படிங்க: சென்னை திரைப்படவிழா - திரையிடப்படும் தமிழ் படங்கள்

ABOUT THE AUTHOR

...view details