தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அன்பை பரப்புங்கள்...ஓம் நம சிவாய...நன்றி தெரிவித்த 'தி க்ரே மேன்' தனுஷ் - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறித்து தனுஷ் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

dhanush
dhanush

By

Published : Dec 18, 2020, 1:15 PM IST

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படத்தை இயக்கிய ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கும் 'தி க்ரே மேன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த பிரமாண்ட படத்தில் ரயன் காஸ்லிங், கிறிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தனுஷூக்கு வெங்கட் பிரபு, பிரசன்னா, கிருஷ்ணா, பாலாஜி மோகன், வைபவ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் சமூகவலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "ரயன் காஸ்லிங், கிறிஸ் ஈவன்ஸ், நடிக்கும் ரூஸோ சகோதரர்கள் (அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா) இயக்கும் நெட்ஃபிளிக்ஸின் 'தி க்ரே மேன்' குழுவோடு இணைகிறேன் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த அற்புதமான ஆக்சன் நிறைந்த அனுபவத்தில் பங்காற்றுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன். உலகம் முழுவதிலும் இருக்கும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு என் நன்றி. இவ்வளவு வருடங்களாக அவர்கள் காட்டி வரும் தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

அன்பை பரப்புங்கள். ஓம் நம சிவாய அன்புடன் தனுஷ்" என்று நன்றி கடிதத்தைப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன் தனுஷ் ‘தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details