தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஆட்சியா பண்றாங்க... அராஜகம் பண்றாங்க...' - 'தட்றோம் தூக்குறோம்' ட்ரெய்லர் சொல்லும் கருத்து - தட்றோம் தூக்குறோம் வெளியாகும் தேதி

நடிகர் டீஜேய் அருணாசலம் நடிப்பில் உருவாகி வரும், 'தட்டுறோம், தூக்குறோம்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

TeeJay
TeeJay

By

Published : Feb 12, 2020, 8:09 PM IST

'அசுரன்' படத்தில் தனுஷூக்கு மூத்த மகனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் டீஜேய் அருணாசலம். இவர் லண்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற பாடகரும் கூட.

'அசுரன்' படத்தைத் தொடர்ந்து டீஜேய் இயக்குநர் அருள் இயக்கத்தில் 'தட்றோம்... தூக்குறோம்' என்னும் புதியப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மீடியா மார்ஷல் தயாரிக்கிறது. இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார்.

பண மதிப்பிழப்பு தருணத்தில் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கன்டெய்னரில் எடுத்து வரும் பணத்தை மூன்று இளைஞர்கள் கடத்திச் செல்கின்றனர். பின்னர் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அரசியல்வாதிகள் இளைஞர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சிகள், மதுபான கடைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் உள்ளிட்டவைகளை அதிரடியாக காட்சிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 28ஆம் தேதி படம் வெளியாகும் என ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க:‘அசுரன்’ படத்தில் தனுஷுடன் நடித்த லண்டன் பிரபலம்!

ABOUT THE AUTHOR

...view details