பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தர்ஷன். இவர் தான் டைட்டில் பட்டத்தை தட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறைவான வாக்குகள் பெற்றதாகக் கூறி பாதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் தர்ஷன் ஒரு படத்தில் நடிப்பார் என்று அறிவித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு தர்ஷன் படம் குறித்து அப்டேட் தெரிந்துகொள்ள அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் தற்போது தர்ஷன் தனது முதல் படம் குறித்த அறிவிப்பை விடியோவாக பேசி வெளியிட்டுள்ளார்.