தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2022, 10:31 PM IST

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியான தள்ளிப் போகாதே!

நடிகர் அதர்வா நடித்துள்ள 'தள்ளிப் போகாதே' படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தள்ளிப் போகாதே
தள்ளிப் போகாதே

'இவன் தந்திரன்', 'பூமராங்' ஆகியப் படங்களை இயக்கிய கண்ணன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, முழுக்க முழுக்க காதல் நகைச்சுவையுடன் கூடிய 'தள்ளிப் போகாதே' படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் அமிதாஷ், ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன் உள்ளிட்டப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டுத் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி கடந்த முறை அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் எனப்படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே 'தள்ளிப் போகாதே' படம் இறுதியாக இன்று (டிசம்பர் 9) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:'என் பலமாக இருந்தீர்கள்' - அண்ணன் குறித்து மகேஷ் பாபு உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details