’தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ, விஜய் கூட்டணியில் உருவாகும் படம் ‘தளபதி 63’. இதில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் (ஜூன் 22) அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் குறித்த நேரத்துக்கு படத்தை முடிக்க முடியாததால், விஜய்யிடம் 40 நாட்கள் அதிகமாக கால்ஷீட் கேட்டிருக்கிறாராம் அட்லீ.
தள்ளிப் போகிறது ‘தளபதி 63’ படப்பிடிப்பு? - தளபதி 63 டீசர்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தள்ளிப் போகின்றன.
‘தளபதி 63’ படத்துக்காக விஜய் 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கிய வேளையில் இருந்து அவ்வப்போது தடைகள் வந்தன. இந்தப் படத்துக்காக பின்னி மில்லில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட செட் தீ விபத்துக்குள்ளானது. அதேபோல் எலக்ட்ரீஷியன் ஒருவர் படுகாயம் அடைந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு காரணங்களால் விஜய்யிடம் 40 நாட்கள் அதிகமாக கால்ஷீட் கேட்டிருக்கிறார் அட்லீ. விஜய்யும் கால்ஷீட் கொடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறார். இந்தத் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.