சென்னை: நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படம் தற்போது உருவாகிவருகிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.
'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.
இந்நிலையில், விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தில் ராஜு தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்காலிகமாக இப்படத்திற்கு 'தளபதி 66' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
'தளபதி 66' குறித்து எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது இதில் விஜய்க்கு வில்லனாக தெலுங்கு நடிகர் நானி நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமன் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆயுத பூஜை அன்று 'தளபதி 66' படத்திற்கான படப்பிடிப்பு பூஜை ஆரம்பமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான் ஈ படத்தில் நடித்தவர் நானி. இவர் கடந்தாண்டு அமேசான் பிரைமில் வெளியான 'வி' என்னும் தெலுங்கு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நானிக்கு 25ஆவது படமாகும்.
இதையும் படிங்க: விஜய்யுடன் பணியாற்றுவது எனக்கு புது அனுபவம் - இயக்குநர் வம்சி