கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக இங்கு ஷுட்டிங் நடைபெற்று வரும் நிலையில், ஷிமோகவிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி நடிகர் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். விஜய் அங்கு இருப்பதை அறிந்த ரசிகர்களை அவரைக் காண கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதையடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டலில் கூடிய ரசிகர்களை பார்த்து கையசைத்தார் விஜய்.
‘தளபதி 64’ படத்துக்காக கர்நாடகாவின் ஷிமோக்காவில் முகாமிட்டுள்ள விஜய்! - தளபதி 64 ஷுட்டிங்
டெல்லி: சென்னையைத் தொடர்ந்து தற்போது இயற்கை எழில் கொஞ்சும் ஷிமோகவில் முகாமிட்டுள்ளனர் தளபதி 64 படக்குழுவினர்.
Actor vijay in Thalapathy64 shooting
மேலும், தளபதி 64 படப்பிடிப்பு நடைபெறும் சிறைச்சாலை பகுதிக்கும் ரசிகர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து குவிகின்றனர்.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் மாளவிகோ மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, ரம்யா, கெளரி கிஷான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை - அனிருத். ஒளிப்பதிவு - சத்யன் சூர்யன்.