தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் இணையும் 'கில்லி வேலு' - 'முத்துப்பாண்டி' கூட்டணி? - தளபதி 66

'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

vijay
vijay

By

Published : Oct 8, 2021, 9:49 AM IST

நெல்சன் இயக்கும் 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிக்கவிருக்கும் நடிகை, துணை கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் யூகத்தின் அடிப்படையில், 'தளபதி 66' குறித்தான தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

முன்னதாக 'தளபதி 66'இல் தமன் இசையமைப்பதாகவும் நடிகர் நானி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா விஜய்க்கு மகளாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது 'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் ஊடகம் ஒன்றின் நேர்காணலில் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாகக் கூறும் காணொலி சமூக வலைதளத்தில் வெளியானது.

ஏற்கனவே விஜய் - பிரகாஷ் ராஜ் கூட்டணி 'கில்லி', 'சிவகாசி', 'போக்கிரி', 'வில்லு' போன்ற படங்களில் இணைந்துள்ளது. இதில் 'வில்லு' பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இணைந்து நடித்த கடைசி படமாகும். அதன்பின் இருவரும் வேறு எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

தசாரா பண்டிகையை முன்னிட்டு 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை போடப்படும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பை அடுத்தாண்டு ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: தளபதி 66: விஜய்க்கு மகளாவது இவரின் மகளா?

ABOUT THE AUTHOR

...view details