தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தளபதி 65 அப்டேட் - துப்பாக்கி 2 படத்திற்கு தயாரான விஜய்? - thalapathy vijay

விஜய்யின் 65 படத்தின் முக்கிய தகவல் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது.

துப்பாக்கி 2 படத்திற்கு தயாரான விஜய்?
துப்பாக்கி 2 படத்திற்கு தயாரான விஜய்?

By

Published : Mar 19, 2020, 5:20 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதற்கிடையில் விஜய் தனது 65வது படத்திற்காக வெற்றிமாறன், பாண்டிராஜ், மகிழ் திருமேனி, அருண்ராஜாகாமராஜா, சுதா கொங்கரா ஆகியோரிடம் கதை கேட்டதாகக் கூறப்பட்டது.

இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தளபதி 65 படத்தை இயக்குநர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும், அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது கிடைத்து இருக்கும் தகவல் என்னவென்றால், தளபதி 65 திரைப்படம், ‘துப்பாக்கி 2’ என்று இணையதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இருப்பினும் இதை இன்னும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியாவில் கோவிட்-19 பரவாததற்கு காரணம் இதாங்கோ 'சகுனி' பிரணிதா!

ABOUT THE AUTHOR

...view details