தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிகர்களை ஒடிச்சென்று காப்பற்றிய தளபதி! - விஜய்

'தளபதி 63' படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக தடுப்பு வேலி உடைந்து ஏற்பட்ட விபத்தில் ரசிகர்களை காப்பற்ற நடிகர் விஜய் ஓடிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

File pic

By

Published : Mar 13, 2019, 5:45 PM IST

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத அப்படத்தினை ரசிகர்கள் 'தளபதி 63' என அழைத்து வருகின்றனர்.

விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேப், தனியார் கல்லூரி என சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யைக் காண அவரது ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இதையறிந்த விஜய் ரசிகர்களைக் காண அங்கு வந்தார். விஜயின் வருகையால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் தடுப்பு வேலியைத் தாண்டி வர முயற்சித்துள்ளனர்.

இதில் தடுப்பு வேலி சரிந்து கீழே விழுந்தது. இதைக் கண்டு பதறிப் போன விஜய், ரசிகர்களைக் காப்பாற்ற ஓடிச் சென்றார். விஜய்யுடன் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் சிலரும் ஓடிச் சென்று ரசிகர்களைக் காப்பாற்றினர். பின்னர், அந்த வேலி கீழே விழுந்துவிடாதபடி தாங்கிப் பிடித்தனர்.

File pic

பின்னர் ரசிகர்கள் யாருக்கும் காயம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின், விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவங்களை அங்கிருந்த ரசிகர் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details