அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘தளபதி 63’. இதில் இந்துஜா, கதிர், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே களமிறக்கப்பட்டிருக்கின்றனர். கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ஜி.கே. விஷ்னு ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெர்சல்’ படத்தில் பாடலாசிரியராக பணியாற்றிய விவேக், இந்த படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றுகிறார். ’தளபதி 63’ படத்தை பற்றி புதிய அப்டேட்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
தளபதி 63... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி இதுதான்? - விஜய்
தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.
vijay
அதன்படி, பாடலாசிரியர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் தளபதி ஃபேன்ஸ் என குறிப்பிட்டு, 30 என்ற எண்ணை பதிவிட்டுள்ளார். ஜுன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருகிறது. அதனை குறிப்பிடும் வகையில் அவர் மே 22ஆம் தேதி இதனை பதிவு செய்துள்ளார். விஜய் பிறந்தநாள் அன்று படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. அதனை விஜய் ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாகவே விவேக் அப்படி பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.