தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’தளபதி 63’ ஃபர்ஸ்ட் லுக்... உற்சாகத்தில் ரசிகர்கள் - atlee

சென்னை: ’தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

thalapathi

By

Published : Jun 21, 2019, 1:36 PM IST

'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜயின் 63ஆவது படம் விரைவில் வெளியாக உள்ளது. 'சர்கார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள இந்தப் புதிய படத்திற்கு 'தளபதி 63' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜயின் 45ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று இரவு 12 மணி அளவில் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 'தளபதி 63' படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் படம் குறித்து அப்டேட் கேள்விகளை இணையதளங்களில் கேட்டனர். இதனையடுத்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த 19ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதன்படி இன்று (ஜூன் 21) மாலை 6 மணிக்கு ’தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் இதனைத் தொடர்ந்து இரவு 12 மணி அளவில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாகும் என்று அறிவித்திருந்தது. எனவே இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக், இரவு 12 மணிக்கு வெளியாக உள்ள செகண்ட் லுக், விஜயின் பிறந்த நாளையும் இணைந்து கொண்டாட ரசிகர்கள் தயாராகிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details