பொதுவாக நடிகர்கள் நடிப்பு தவிர இயக்கம், பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது உள்ளிட்ட சினிமா சார்ந்த பணிகளில் ஈடுபவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இவற்றிலிருந்து சற்று வித்தியாசமானவராகத் திகழும் நடிகர் அஜித்குமார், பைக் மற்றும் கார் ரேஸிங், சமையல், ட்ரோன் வடிவமைப்பு என வெவ்வேறு துறைகளில் தனது தனி திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன் காரணமாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் இன்ஷிபிரேஷனாகத் திகழ்கிறார் அஜித். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தனது அடுத்த படத்துக்காக தயாராகி வந்தார்.
இந்த நிலையில், 1990களில் வெளிவந்த முகவரி, வாலி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலிருந்து தோன்றிய ஹேண்ட்சம் லுக்குக்கு மாறியுள்ள அவர் டெல்ல செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அப்போது ரசிகர்கள் அவரை அங்கு சூழ்ந்துகொண்டு செஃல்பிக்களாக எடுத்துத் தள்ளினர்.
ஒரு கட்டத்தில் ரசிகர்களிடம் ஃபோனை வாங்கிய தன்னை சூழ்ந்திருந்த ரசிகர்களுக்கு மத்தியில் தானே செல்ஃபி எடுத்து அவர்களைக் குஷிப்படுத்தினார். இந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகின.