தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய்யின் 'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு தாளம் போட்டு அசத்திய தாய்லாந்து மாணவர்கள்! - விஜய் குட்டி ஸ்டோரி பாடல்

நடிகர் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல், தாய்லாந்து நாட்டின் பள்ளி மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜயின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு தாளம் போட்ட தாய்லாந்து பள்ளி மாணவர்கள்
விஜயின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு தாளம் போட்ட தாய்லாந்து பள்ளி மாணவர்கள்

By

Published : Feb 19, 2020, 8:16 AM IST

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய் பாடியுள்ள 'குட்டி ஸ்டோரி' பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது. அருண் காமராஜ் எழுதியுள்ள இப்பாட்டிற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

எளிமையான வார்த்தைகள் கொண்ட இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சிங்கப்பூர், மலேசியா நாட்டு மக்களும் இப்பாடலை விரும்பி கேட்கின்றனர். அந்த வகையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், குட்டி ஸ்டோரி பாடலுக்கு தாளம் போட்டு, பாட்டு பாடி மகிழ்ந்துள்ளனர். அந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குட்டி ஸ்டோரி பாடலைத் தற்போது வரை யூடியூப்பில் 15 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். அனிருத்தின் இப்பதிவு தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

இதையும் படிங்க:பண்டி அவுர் பப்லி 2 படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details