தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற 'தாய் நிலம்' திரைப்படம்! - சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற தாய்நிலம் திரைப்படம்

காஸ்மோஸ் சர்வதேச திரைப்பட விழாவில், 'தாய் நிலம்' திரைப்படம் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

தாய் நிலம்
தாய் நிலம்

By

Published : Aug 14, 2020, 6:33 PM IST

நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் காஸ்மோஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டன. அதில் 'தாய் நிலம்' திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநர் என்று இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றது.

சிறந்த ஒளிப்பதிவாளராக, பிரசாந்த் பிரணவமும், சிறந்த அறிமுக இயக்குநராக அபிலாஷ். ஜி.தேவனும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இது குறித்து படக் குழுவினர் கூறுகையில்,"முதன்முதலில் பிரசாந்த்தும், அபிலேஷ்.ஜி.தேவனும், சேர்ந்து பணியாற்றிய திரைப்படத்திற்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அதைவிட இலங்கைத் தமிழ் மக்களின் வலியையும், வாழ்க்கையையும் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனின் மனதையும் தொடும் அளவில் செதுக்கப்பட்டதன் பலன் தான், இந்த விருதுகள்.

இந்த விருதை இலங்கையில் அனைத்தையும் இழந்து, அநாதைகள் ஆக்கப்பட்டு, தெருவில் முகவரி இன்றி வாழும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

விருது வென்றவர்

இப்படம் திரையரங்குகள் மீண்டும் திறந்தவுடன் திரைக்கு வரக் காத்திருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details