நிகழ்ச்சி தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பன்முகத் திறமை கொண்டவர் சித்ரா. இவர், டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மறைந்த சித்ரா நடித்த 'கால்ஸ்' படத்தின் டீசர் வெளியீடு! - சின்னத்திரை நடிகை சித்ரா
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்த "கால்ஸ்" படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இவர், வெள்ளித்திரையில் முதல்முறையாக கதாநாயகியாக நடித்த படம் கால்ஸ். இன்பினிட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. ஜெ. சபரீஸ் இயக்கியுள்ள இப்படத்தில் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தரராஜன், விநோதினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், படத்தின் டீசர் இன்று (ஜனவரி 1) வெளியிடப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இதை கொண்டாட சித்ரா உயிருடன் இல்லை என படக்குழுவினர் வேதனை தெரிவித்துள்ளனர்.