பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் படம் ரிலீஸ் என்றால் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடி மகிழ்வார்கள். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'சூப்பர் 30' படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் கல்லா கட்டி வருகிறது. 'சூப்பர் 30' படத்திற்காக உடல் எடையை குறைத்து அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
இந்நிலையில், ஹிருத்திக் ரோஷனும் இளம் கதாநாயகர் டைகர் ஷெராஃப்பும் நடித்துள்ள 'வார்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கும் இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். 53 நொடிகள் மட்டுமே இடம்பெறும் இப்படத்தின் டீசரில் எதிர்பாராத ட்விஸ்ட், மாஸான ஹீரோ என்ட்ரி, ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் என அடுத்தடுத்த நொடிகளில் பார்ப்பவரை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.