தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எளிய மக்களின் பாதுகாவலன் 'கர்ணன்'! - தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

கூர்மையான வாள் மீது ஆண், பெண் என பலரது கைகள் அரவணைத்தவாறு ஒன்று கூடி பிடித்திருக்க, கர்ணன் படத்தின் டைட்டில் லுக்கை படத்தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், படத்தின் மேக்கிங் வீடியோ குறித்த அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.

Dhanush in Karnan movie
கர்ணன் படத்தில் தனுஷ்

By

Published : Jul 28, 2020, 1:03 PM IST

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷின் 37ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பல்வேறு விதமான வாழ்த்துகளோடும், புகைப்படங்களோடும் சமூக வலைதளங்கள் முழுவதும் அலங்கரித்து வருகின்றனர்.

ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் 'ஜகமே தந்திரம்' படத்தின் 'ரகிட ரகிட' பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் டைட்டில் லுக் அடுத்த ட்ரீட்டாக ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கூர்மையான வாள் மீது ஆண், பெண் என பலரது கைகள் அரவணைத்தவாறு ஒன்று கூடி பிடித்திருக்க, கர்ணன் படத்தின் டைட்டில் லுக் அமைந்துள்ளது. பின்னணியில் யானை, குதிரை, மாடு, ஆடு உள்ளிட்ட விலங்குகள் ஒரு பக்கமும், அதன் எதிரே எளிய மக்களின் கூட்டம் மறுபக்கமும் இருக்கின்றன.

தனுஷ் நடிக்கும் கர்ணன் டைட்டில் லுக்

இதில், தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கர்ணன் படக்குழு சார்பில் தனுஷுக்கு பிறந்தநாள் பரிசு என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் தாணு, கர்ணன் மேக்கிங் வீடியோ இன்று மாலை 5.55 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

'கர்ணன் கொடுப்பவன் இல்லை, உரிமைகளை கேட்பவன்' என்று கர்ணன் குறித்து இந்தப் படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ் கூறியிருந்தார். அதேபோல், பலரது கைகள் கூர்மையான வாள் மீது அரவணைத்து நிற்கும் இந்தப் போஸ்டர், எளிய மக்களின் குரலாகவும், பாதுகாவலனாகவும் படத்தின் ஹீரோ இருப்பார் எனக் காட்டுவதாக உள்ளது.

'நீதி சூரியனைப்போல் முளைத்தெழக்கூடியது -கர்ணன்' என்று குறிப்பிட்டு தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து படத்தின் டைட்டில் லுக்கை பகிர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

முன்னதாக, மலை உச்சியில் கொளுத்தும் வெயிலில் வாளுடன் நிற்பது போன்றும், சூரியன் அஸ்தமிக்கும் அந்தி மாலைப் பொழுதில் குதிரையுடன் தட்டிக்கொடுத்தவாறு தனுஷ் நிற்பது போன்ற புகைப்படங்களும் வெளியிடப்பட்டதுடன், படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்களும் தெரிவிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து தற்போது டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேக்கிங் வீடியோவும் வெளியிடப்படவுள்ளது.

இதையும் படிங்க: 'ஜகமே தந்திரம்' - தனுஷின் குத்தாட்டத்துடன் 'ரகிட ரகிட' வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details