நெஞ்சுவலி காரணமாக சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்கள், திரைப் பிரபலங்கள் நேரிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், விவேக் மரணத்திற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சகோதரர் பத்மஸ்ரீ விவேக் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.