’தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் சுமார் 10 ஆண்டுகளாக திரைப்படங்கள் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுவந்தன. பெயர்தான் ’தமிழ் ராக்கர்ஸ்’ என்றாலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்கள் இத்தளத்தில் வெளியாகின.
திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியான சில மணி நேரங்களில் அதை, ’தமிழ் ராக்கர்ஸ்’ பதிவுசெய்து தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்திவந்தது. அதனால் இதை ஒழித்துக்கட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது எதுவும் கடைசி வரை கைக்கொடுக்கவில்லை.
’தமிழ் ராக்கர்ஸை முடக்குவேன்' என்று கூறிதான் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றிபெற்றார். இருப்பினும் எவ்வளவு முயற்சி செய்தும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டை முடக்க முடியவில்லை.