தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா வாகினி புரொடெக்சன்ஸ் 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை பல படங்களை தயாரித்து வருகிறது. நாகிரெட்டி மறைவுக்குப் பிறகு வெங்கட்ராம ரெட்டி(75) இந்நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். இவரது தயாரிப்பில், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்து வரும் 'சங்கத்தமிழன்' படங்களை தயாரித்து வந்தார்.
விஜய் சேதுபதி பட தயாரிப்பாளர் காலமானார்..! - தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி(75)
விஜயா வாகினி புரொடெக்சன்ஸ் நாகிரெட்டியின் இளைய மகனும் திரைப்பட தயாரிப்பாளருமான வெங்கட்ராம ரெட்டி(75) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
வெங்கட்ராம ரெட்டி
இந்நிலையில், உடல் நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வெங்கட்ராம ரெட்டி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இவரது இறுதி சடங்குகள் நாளை காலை 7.30 - 9.00 மணிக்குள் நெசப்பாக்கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பாரதிரெட்டி என்ற மனைவியும், ராஜேஷ்ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி, அர்ச்சனா ரெட்டி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.