பருவமழை பொய்த்து போனதால் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. 2018ஆம் ஆண்டைவிட இந்த வருடம் முக்கியமாக சென்னையில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இன்னும் இருபது நாட்களில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவும் என்று அரசு அலுவலர்கள், இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் சென்னையை விட்டு வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டனர். இந்த தண்ணீர் பஞ்சம் தமிழ்நாட்டை மட்டும் அல்ல இந்தியாவையே பாதிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், காமெடி நடிகர் சதீஷ் தண்ணீர் சேமிப்பு குறித்து காணொளி ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காணொளி வைரலாகிவருகிறது.