தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தேவராட்டம் கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்? - kollywood news

நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்துவருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேவராட்டம் கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம்?
தேவராட்டம் கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம்?

By

Published : Feb 10, 2022, 1:43 PM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் தமிழ் சினிமா உலகில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும், மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனும் ஆவார்.

மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து இவன் தந்திரன், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் தன்னுடன் தேவராட்டம் படத்தில் நடித்த மஞ்சிமா மோகனை காதலித்துவருவதாகக் கூறப்படுகிறது. மஞ்சிமா மோகனும் இவரை காதலிக்கிறார் என்கிறார்கள்.

இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், தற்போது இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால் இந்த ஆண்டின் இறுதியில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் அதாவது ஏப்ரலில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேவராட்டம் கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம்

இதையும் படிங்க: சிம்பு தொடர்ந்த மான நஷ்ட வழக்கு; விஷாலின் மனு தள்ளுபடி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details